< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் - நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாநில செய்திகள்

"ஒரே நாடு, ஒரே தேர்தல் - நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தினத்தந்தி
|
3 Sept 2023 5:29 PM IST

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது;

"நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம். ஒரே நாடு, ஒரே தேர்தலால், மக்களின் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும். காலத்தின் கட்டாயத்தின்படி, இந்தியா முழுவதும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்ல விஷயம்.

முதல்-அமைச்சர் கூறியது போல் அதிமுக ஒன்றும் விபரீதம் தெரியாமல் ஆதரிக்கவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தலால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தலை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம் என கூற திமுக அஞ்சுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்