< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை
|27 Sept 2023 2:12 PM IST
திருக்கழுக்குன்றத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புது மேட்டுதெரு பகுதியில் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 38). இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் திருக்கழுக்குன்றம் மற்றும் புதுப்பட்டினம் பகுதிகளில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் புதுமேட்டு தெருவில் உள்ள அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.