< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை

தினத்தந்தி
|
8 Aug 2023 12:30 AM IST

செங்கோட்டை அருகே தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே மேலப்புதூர் கல்லுகிடங்கு பகுதியில் உள்ள தோப்பில் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்