< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
|25 Sept 2022 2:11 AM IST
போக்சோ சட்டத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
அம்பை சந்தை மடம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 45). இவர் ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி (பொறுப்பு) விசாரணை நடத்தி ரத்தினத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.