< Back
மாநில செய்திகள்
ரூ.3.5 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

ரூ.3.5 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது

தினத்தந்தி
|
8 May 2023 2:09 AM IST

ரூ.3.5 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மணப்பாறை:

மணப்பாறை நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரின் குடும்ப நண்பர் காமராஜ் ஆகியோரிடம் தாராபுரம் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், சேலம் மாசி நாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர் பாபு ஆகிய 2 பேரும் ஆன்லைன் தொழில் செய்து வருவதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.15 ஆயிரம் வட்டி வரும் என்றும் கூறி ரூ.3.5 கோடி வரை வினோத் மற்றும் காமராஜிடம் பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வெளிநாடு சென்று விட்டு ஐதராபாத் வந்த கிருஷ்ணபிரகாசை மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்