< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஒருவர் கைது
|18 Feb 2024 7:46 AM IST
வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் ,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில். பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.