< Back
தமிழக செய்திகள்
எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
நாமக்கல்
தமிழக செய்திகள்

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
26 Dec 2022 12:11 AM IST

திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த ஆரோன் மகன் தேவராஜ் என்ற தேவா (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 20-ந் தேதி இரவு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், தேவராஜின் மனைவி சரண்யா, தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து தேவராஜின் மனைவி சரண்யா, கள்ளக்காதலன் விமல்குமார், அவருடைய நண்பர் கோபாலகிருஷ்ணன், சங்ககிரி புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பரசு (29), டிரைவர் சக்திவேல் (25), சென்ட்ரிங் தொழிலாளி பார்த்திபன் (29) ஆகிய 6 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சங்ககிரியைச் சேர்ந்த ராம்குமார் (24) கூலித்தொழிலாளியை திருச்செங்கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்