< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து

தினத்தந்தி
|
15 Sept 2024 8:33 AM IST

பேரிடர் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள். பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்