< Back
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2024 9:14 PM IST

ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில்(06160) நாளை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரெயில் கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்..இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர்(கோவை), பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். .மேற்கண்ட ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது..

அதேபோல, நாளை பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில்(06161) புறப்படுகிறது. இந்த ரெயில் மங்களூருக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், நீலேஸ்வரம், காசர்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்