ஓணம் பண்டிகை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
|ஓணம் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தும், சிறப்பித்தும், வருகிறார்கள்.
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்; ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை உணர்த்தும், திருவோணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.