< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகை எதிரொலி.. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
|13 Sept 2024 10:47 AM IST
ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
தென்காசி,
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை கேரள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுவார்கள். இதையொட்டி ஒவ்வொரு நாளும் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள்.
இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, தென்காசி, சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேபோல, பிச்சி, கனகாம்பரம் பூக்கள் விலை கிலோ ரூ.1,000க்கும், சம்பங்கி ரூ.400, ரோஜா ரூ.260க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.700க்கும், முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது.