< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
|26 Aug 2023 12:15 AM IST
கூடலூரில் உள்ள ஒரு வங்கியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
கேரள மாநில மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் தமிழக கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் வீடுகள், பணிபுரியும் அலுவலகங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதன்படி கூடலூரில் உள்ள ஒரு வங்கியில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அத்தப்பூ கோலம் போட்டு அசத்தினர். இந்த கோலம் வங்கிக்கு வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.