< Back
மாநில செய்திகள்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை

தினத்தந்தி
|
26 Aug 2023 2:03 AM IST

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நடைபெற்றது. கேரளா பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், யானை ஊர்வலத்துடன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசனை கேரள மாணவ, மாணவிகள் வரவேற்றனர். அவர் பேசுகையில், 'ஓணம் பண்டிகையை உங்களுடன் கொண்டாடுவதற்கு வந்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. ஓணம் என்பது பண்டிகை மட்டுமல்ல. இது கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வின் கொண்டாட்டம். அபரிமிதமான விளைச்சலைக் கொண்டாடவும், புகழ்பெற்ற மன்னன் மகாபலிக்கு மரியாதை செலுத்தவும் குடும்பங்கள் ஒன்றிணைவோம். மகாபலி செய்தது போல், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். 'அத்தப்பூ' கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும், என்றார்.

நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் செயலர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் குழும முதல்வர்கள், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்