< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்... அருவியில் ஆனந்த குளியல்...!
|9 Dec 2022 4:40 PM IST
குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பனிமூட்டமும் இருந்தது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்தது வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்துச் செல்கிறார்கள். இதனால் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் வரும் அய்யப்ப பக்தர்கள் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலுக்கும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.