< Back
மாநில செய்திகள்
கம்பத்தில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

கம்பத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கம்பத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கம்பம் காந்தி சிலை முன்பு தொடங்கிய ஊர்வலம் போக்குவரத்து சிக்னல், ஏ.கே.ஜி. திடல் வழியாக சென்று தியேட்டர் அருகே நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது, பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அவர்களுக்கு பொது இடங்களில் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
மேலும் செய்திகள்