< Back
மாநில செய்திகள்
கம்பத்தில்சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில்சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

கம்பத்தில், எல்.எப். ரோட்டில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கம்பத்தில், பிரதான சாலையாக எல்.எப்.ரோடு உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் மளிகை கடை, ஜவுளி கடை, நகைக்கடைகள், மருந்துக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன. இதனால் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கம்பத்திற்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கம்பம் பழைய தபால் நிலையத்தில் இருந்து போக்குவரத்து சிக்னல் வரை ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எல்.எப். மெயின் ரோடு பகுதியில் காலை நேரத்தில் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், சரக்கு வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்