< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கம்பத்தில் கஞ்சா விற்ற தாய்-மகன் கைது
|6 Sept 2022 4:19 PM IST
கம்பத்தில் கஞ்சா விற்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் குரங்குமாயன் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 46), அவரது மகன் ஜெயக்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.