< Back
மாநில செய்திகள்
கம்பத்தில் தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில் தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

கம்பத்தில் தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கம்பம்,

கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 39). கம்பம் வடக்கு நகர தி.மு.க. துணை செயலாளர். கம்பத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். கடந்த 8 மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் ராமகிருஷ்ணன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பாஸ்கரனுக்கு ஆதரவாக கம்பம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்த தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளரான ராஜ்குமார் என்பவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியிருந்தார். அந்த புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டரணி செயலாளர் ஜெயகாளை என்பவர் ராமகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் மீண்டும் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன்பேரில் போலீசார் பாஸ்கரன், ராஜ்குமார், ஜெயகாளை ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்