தேனி
கம்பத்தில்வாலிபர்களுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் கைது
|கம்பத்தில் வாலிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் அபிமன்யூ (வயது 30). நேற்று முன்தினம் இவர், தனது நண்பர் தினேசுடன் கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த வாலிபர்களிடம் பேசி விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்த வாலிபர்கள் மறுப்பு தெரிவித்ததால் 5 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அபிமன்யூ புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடலூர் கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (41), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (40), கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்த மனோஜ் (23) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.