< Back
மாநில செய்திகள்
கம்பத்தில்  வியாபாரிக்கு கொலை மிரட்டல்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

கம்பத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவர், கம்பம் எல்.எப். மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். அருகே பழங்களை மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே பழங்கள் விற்பனை செய்பவர் பாஸ்கரன். இவர், சுரேசிடம் கம்பத்தில் மொத்த விலையில் பழங்களை வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறினார்.

ஆனால் சுரேஷ் தொடர்ந்து பழங்களை மொத்த வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி பாஸ்கரன், மகேஸ்வரன், சுரேஷ் பாலு, சிலம்பரசன், நிவேக்ஜி, திரவியம், செல்லத்துரை, தமிழ்செல்வி, வனிதா ஆகியோர் சுரேஷ் பழக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுரேசிடம் ஆபாசமாக பேசியதுடன், கடையை காலி செய்து விடு, இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாஸ்கரன், மகேஸ்வரன் உள்பட 9 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்