< Back
மாநில செய்திகள்
கம்பத்தில்  சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் :  போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தினத்தந்தி
|
4 Dec 2022 10:07 PM IST

கம்பத்தில் சரக்கு வாகனங்களில் ஆபத்தா முறையில் பயணம் செய்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளாக காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், திராட்சை, வாழை, காய்கறிகள் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் விளைச்சல் அடைந்ததும் அறுவடை செய்வதற்காக தோட்டத் தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.

அப்போது வாகனங்களின் பின்புறம் கதவுகளில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றன. இவ்வாறு பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மேலும் விதிகளை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்