தேனி
கம்பத்தில்தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
|கம்பத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். நேற்று முன்தினம் அருண்குமார் மோட்டார்சைக்கிளில் சுந்தர் மற்றும் தனது நண்பர் ஒருவருடன் சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் கரைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வருவதற்காக அருண்குமார் மோட்டார்சைக்கிளை இயக்கினார். ஆனால் மோட்டார்சைக்கிள் பழுதானதால் 3 பேரும் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு வந்தனர்.
அப்போது சின்ன வாய்க்கால் சாலையை கடந்து சென்றபோது திடீரென அருண்குமாருக்கும், சுந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் சுந்தரை தாக்கினாா். இதில் காயம் அடைந்த சுந்தர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கம்பம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அருண்குமார், அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.