தேனி
கம்பத்தில் மின்கம்பி மீது முறிந்து விழுந்த மரம்
|கம்பத்தில் மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது
கம்பம் காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை சுற்றி பல்வேறு மரங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று மாலை பள்ளி நுழைவு வாயில் அருகே 20 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து நின்ற மரம் ஒன்று முறிந்து அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் மரம் விழுந்த வேகத்தில் மின்கம்பிகள் ஒன்றொடு ஒன்று உரசியதில் மின் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து கம்பம் தீயணைப்பு படையினர், மின்வாரியத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மின்கம்பி மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதற்கிடையே சாலையின் குறுக்கே மரம் கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரம் விழுந்த வேகத்தில் மின்தடை ஏற்பட்டதால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக மின்வாரிய துறையினர் தெரிவித்தனர்.