< Back
மாநில செய்திகள்
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின்போது, சிறு குடும்ப நன்மைகள், தாய்-சேய் நலம், ஆணும் பெண்ணும் சமம் ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பாக பணியாற்றிய கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, செவிலியர் கல்லூரி முதல்வர் கண்ணம்மாள், குடும்பநலம் துணை இயக்குனர் டாக்டர் அன்புச்செழியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்