< Back
மாநில செய்திகள்
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு
மாநில செய்திகள்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
9 Sept 2023 3:46 AM IST

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒத்தக்குதிரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில், உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோபி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிசியோதெரபியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோபி போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கரட்டூர் வளைவில் முடிவடைந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்