ஈரோடு
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் அன்னதானம்
|விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் அன்னதானம் நடந்தது.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஈரோடு மாநகர் மாவட்ட தே.மு.தி.க. மற்றும் நந்தா மருத்துவ கல்லூரி, மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சூரம்பட்டி, திண்டல், மாணிக்கம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், தமிழ்ச்செல்வன், தலைமை பேச்சாளர் விஜய் துரைசாமி, ஒன்றிய செயலாளர் சரவணகுமார், பொருளாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் சரவணன், பச்சமுத்து, சிலம்பரசன், சுரேஷ், பெருமாள், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.