< Back
மாநில செய்திகள்
வரலட்சுமி நோன்பையொட்டி  வளையல் அலங்காரத்தில் பத்மாவதி அம்மன்
தேனி
மாநில செய்திகள்

வரலட்சுமி நோன்பையொட்டி வளையல் அலங்காரத்தில் பத்மாவதி அம்மன்

தினத்தந்தி
|
5 Aug 2022 9:52 PM IST

வரலட்சுமி நோன்பையொட்டி பத்மாவதி அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்

போடி நகர் காமராஜர் சாலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அருள்மிகு பத்மாவதி அம்மன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இந்நிலையில் இன்று வரலட்சுமி நோன்பையொட்டி பத்மாவதி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, 50 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்