< Back
மாநில செய்திகள்
வார இறுதி நாளையொட்டி, இன்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநில செய்திகள்

வார இறுதி நாளையொட்டி, இன்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
3 Nov 2023 7:26 AM IST

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் பணியாற்றக்கூடிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்