< Back
ஆன்மிகம்
ஈரோடு
ஆன்மிகம்
அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|27 Aug 2022 2:19 AM IST
அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அமாவாசையையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமையன்று அமாவாசை வந்ததால் குறிப்பாக அம்மன் கோவில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.புகழ்பெற்ற பண்ணாரி அம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பவானி செல்லாண்டியம்மன், ஊஞ்சலூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், கொடுமுடி மலையம்மன், புதுமாரியம்மன், கொளாநல்லி கோட்டை மாரியம்மன், பூங்குழலியம்மன் மற்றும் பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர், கொந்தளம் நாகேஸ்வரர், சென்னிமலை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்கள்.