< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஆடி மாத சனிக்கிழமையையொட்டிகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு
|30 July 2023 12:15 AM IST
ஆடி மாத சனிக்கிழமையையொட்டி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னமனூர் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, நேற்று ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அவர்கள் சுரபி நதியில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி இறை வழிபாடு நடத்தினர். வருகிற 4-ந்தேதி திருக்கல்யாண நிகழச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.