< Back
மாநில செய்திகள்
பிரதோஷத்தையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
24 Sept 2022 12:45 AM IST

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி மாலை 4 மணியளவில் நந்தி மற்றும் சுவாமி காளகத்தீசுவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து வெள்ளி இடப வாகனத்தில் காளகத்தீஸ்வரர் சமேத ஞானாம்பிகை கோவில் உள்பிரகாரத்தில் 3 முறை வலம் வருதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் ஓத சுவாமிகள் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மேற்கு ரதவீதி சிவன் கோவில், முள்ளிப்பாடி காமேஸ்வரர்-கோகிலாம்பாள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


இதேபோல் பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் சிவன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் பழனி மலை கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில், உள்ளிட்ட சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


மேலும் செய்திகள்