< Back
மாநில செய்திகள்
பெரியார் பிறந்தநாளையொட்டி  சமூக நீதி எழுச்சி ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

பெரியார் பிறந்தநாளையொட்டி சமூக நீதி எழுச்சி ஊர்வலம்

தினத்தந்தி
|
17 Sept 2022 10:02 PM IST

தேனியில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக நீதி எழுச்சி ஊர்வலம் நடந்தது

தேனியில் பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக நீதி எழுச்சி ஊர்வலம் நடந்தது. பூதிப்புரம் சாலை சந்திப்பில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கம்பம் சாலை, நேரு சிலை சிக்னல் வழியாக சென்று பழைய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்துக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தின்போது, பெரியார் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி பலர் வந்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து பெரியார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், நகர செயலாளர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் தர்மர், ஜெய்பீம் புரட்சிப்புலிகள் கட்சியின் தலைவர் அருந்தமிழரசு மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு கிறிஸ்தவ நல மக்கள் பேரமைப்பு, சமூக நல்லிணக்கப்பேரவை உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்