< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
|19 Feb 2023 12:15 AM IST
மகா சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊரில் உள்ள கோவிலில் இருந்து மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மேலும், குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அய்யனார் ஊர்வலம் நடந்தது. வழியெங்கும் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேனி கணேச கந்தபெருமாள் கோவில், கருவேல்நாயக்கன்பட்டி மலைக்கோவில் ஆகிய இடங்களிலும் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.