< Back
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று  சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
26 Aug 2024 5:21 AM IST

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னை,

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேர இடைவெளிகளில் இயங்கும்: அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும்.காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்