தேனி
கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
|தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. முதன்மை கல்வி அலுவலகத்தால் ஏற்கனவே போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் மொத்தம் 25 பேர் இதில் பங்கேற்றனர்.
அதில், எ.புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துசுவாதி முதலிடமும், தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நந்தகுமார் 2-வது இடமும், பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அமிர்தவர்ஷினி 3-வது இடமும் பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு பிரிவில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நாகஜோதி, தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தனபாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ செய்திருந்தார்.