< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவு நாளையொட்டி பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவு நாளையொட்டி பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம்

தினத்தந்தி
|
8 Aug 2023 4:06 PM IST

கருணாநிதி நினைவு நாளையொட்டி பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்குள்ள தொழு நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் பூபாலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், தி.மு.க காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர்.பி.சந்தானம் ஆகியோர் கலந்துக்கொண்டு கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தொழு நோயாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்