< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு.!
|16 Sept 2023 9:44 AM IST
மதுரையில் பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரை,
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ 200 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.