விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
|விநாயகர் சதுர்த்தியையொட்டி, பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கோலகலாமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் பூஜைப்பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பூ, பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றையும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனையும் தீவிரமாக நடந்தது. மேலும், அபிஷேகத்திற்கு தேவையான சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் என, விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது.
சென்னை கோயம்பேட்டில் பூஜை பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.