ஈரோடு
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருப்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே அம்மன் கோவிலில் வழிபடுவதற்காக பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனை தரிசனம் செய்வதற்காக காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மலர்களை வாங்கி சென்று அம்மனுக்கு வழங்கி வழிபட்டனர். விழாவையொட்டி பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன்
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு கூழ் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன், பெரியவலசு முத்து மாரியம்மன், சின்னவலசு மகா மாரியம்மன், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நாடார்மேடு கெட்டிநகர் சமயபுரம் மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.