< Back
மாநில செய்திகள்
இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி  பள்ளபட்டியில் போலீசார் வாகன சோதனை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி பள்ளபட்டியில் போலீசார் வாகன சோதனை

தினத்தந்தி
|
12 Sept 2022 12:22 AM IST

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி கொடைரோடு அருகே பள்ளபட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்


தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அரசியல் கட்சியினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடிக்கு சென்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட எல்லையான கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி பிரிவில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இங்கு திண்டுக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து அவர்களின் வாகன எண்ணை ஆய்வு செய்தும், முறையான அனுமதி பெற்று செல்கிறார்களா? என்றும் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, ராஜபுஷ்பா ஆகியோர் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்