< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கை
|22 Oct 2022 11:19 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி பொதுமக்கள் கடைகளுக்கு சென்று புதிய ஆடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வருகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மோட்டார்சைக்கிள்களை ஓட்டி வருபவர்களிடம் உரிய ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினர். யாரேனும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா? என்றும் சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.