< Back
மாநில செய்திகள்
தேவர் குருபூஜை விழாவையொட்டி, சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
மாநில செய்திகள்

தேவர் குருபூஜை விழாவையொட்டி, சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
29 Oct 2023 9:32 PM IST

பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிரான இந்த போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

நாளை முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டல், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தென்னிந்திய நேதாஜி மற்றும் தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து நேதாஜியையும், முத்துராமலிங்கத் தேவரையும் வீழ்த்த முயற்சித்த ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் மற்றும் பா.ஜ.க.வினர் பசும்பொன் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிரான இந்த போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்