< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
தேனி
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
26 Dec 2022 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ. புனித பவுல் ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணி மற்றும் காலை 10 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தேனி சபை குரு அஜித் ஸ்டேன்லி தலைமை தாங்கினார். உதவி குரு கிளாட்வின் சாம் முன்னிலை வகித்தார். இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, அரண்மனைப்புதூர் உள்பட தேனி சுற்றுவட்டார பகுதிகளிலும் கிறிஸ்தவ ஆலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

உத்தமபாளையத்தில் விண்ணரசி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் பங்குத்தந்தை அந்தோணி ஜோசப் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ராயப்பன்பட்டியில் உள்ள புனித பனிமய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல், தேவாரம், அனுமந்தன்பட்டி, தே.சிந்தலைச்சேரி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்