< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு
|26 Jun 2023 11:41 PM IST
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில் கரூர் ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலந்து கொண்டு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய பேரணியை தொடங்கி வைத்தும், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.