< Back
மாநில செய்திகள்
சொத்து பிரச்சினையில்சரக்கு வாகன டிரைவருக்கு அரிவாள் வெட்டு
தேனி
மாநில செய்திகள்

சொத்து பிரச்சினையில்சரக்கு வாகன டிரைவருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
24 April 2023 6:45 PM GMT

சின்னமனூர் அருகே சொத்து பிரச்சினையில் சரக்கு வாகன டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன்கள் சவுந்தரபாண்டியன் (வயது 25), அபினேஷ் (20). சரக்கு வாகன டிரைவர். சவுந்தரபாண்டியன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா். அபினேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் சவுந்தரபாண்டியன் தனது தாய் ஈஸ்வரியிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபினேசுக்கும், அவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ் கம்பியை எடுத்து சவுந்தரபாண்டியன் தலையில் தாக்கினார். பின்னர் அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து அபினேசை வெட்டினார். படுகாயமடைந்த 2 பேரும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து 2 பேரும் ஓடைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்