< Back
மாநில செய்திகள்
கம்பம்மெட்டு மலைப்பாதையில்  வேன் டிரைவரிடம் செல்போன் பறிப்பு
தேனி
மாநில செய்திகள்

கம்பம்மெட்டு மலைப்பாதையில் வேன் டிரைவரிடம் செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
13 Nov 2022 12:15 AM IST

கம்பம்மெட்டு மலைப்பாதையில் வேன் டிரைவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஷியாம் (வயது 26). வேன் டிரைவர். கடந்த 10-ந் தேதி இவர், கொச்சியில் இருந்து வேனில் 26 பேரை தமிழகத்திற்கு சுற்றுலாவுக்கு அழைத்து வந்தார். கம்பம்மெட்டு மலைப்பாதையில் அடிவாரம் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்துபோது வேன் பழுதானது. இதையடுத்து ஷியாம், வேனை நிறுத்திவிட்டு அதில் வந்த நபர்களை வேறு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் அவர் வேனிலேயே தங்கிவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் ஷியாமை தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்