< Back
மாநில செய்திகள்
பள்ளி திறந்த முதல் நாளிலேயேபோக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதி
தேனி
மாநில செய்திகள்

பள்ளி திறந்த முதல் நாளிலேயேபோக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதி

தினத்தந்தி
|
13 Jun 2023 12:15 AM IST

போடியில், பள்ளி திறந்த முதல் நாளிலேயே போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் போடியில் பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் வருகை தந்தனர்.

காலை 8.30 மணி அளவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். அந்த சாலை குறுகலாக உள்ளதால் பள்ளி நுழைவு வாயில் அருேக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். போக்குவரத்து போலீசார் இல்லாத காரணத்தால் நெரிசலை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க அந்த பகுதியில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்