< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கார் மீதுமோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
|17 May 2023 12:15 AM IST
போடி அருகே கார் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர்கள் காவியன் (வயது 20), பிரவீன்குமார் (17). நேற்று முன்தினம் இவர்கள் தங்களது நண்பர்கள் 2 பேருடன் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சூரியநெல்லி பகுதிக்கு மோட்டார்சைக்கிள்களில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 2 மோட்டார்சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர். போடிமெட்டு மலைப்பாதையில் புலியூத்து என்ற இடத்திற்கு மேலே சென்றபோது, எதிரே வந்த கார் மீது பிரவீன்குமார் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பிரவீன்குமார், காவியன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.