< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டியில் மது ஒழிப்பு மாநாடு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் மது ஒழிப்பு மாநாடு

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது.

தேனி,

தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆண்டிப்பட்டி நகரில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார்.

பெண்கள் இயக்கத்தின் ஆலோசகர் கருத்தம்மாள், செயற்குழு உறுப்பினர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், 500 மதுக்கடைகளை மூடியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தினமும் 5 மணி நேரம் மட்டுமே மதுபானம் விற்க வேண்டும். மதுவின் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்