< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து வரும் 6-ம் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு
மாநில செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து வரும் 6-ம் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Sept 2022 11:50 AM IST

மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து வரும் 6-ம் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் அடுத்த மாதம் 6-ந் தேதி மாலை நடைபெற உள்ளது.

அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு-போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத்தினரையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்